என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வருஷநாடு வனப்பகுதியில் தீ . கும்பல்"
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே வருஷநாடு வனச்சரகத்துக்கு உட்பட்ட எருமைச் சுனை, கண்டமனூர் வனச் சரகத்துக்கு உட்பட்ட காமராஜர்புரம் மலைப் பகுதியில் நேற்று திடீரென காட்டுத் தீ பற்றி எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் வனச்சரகர்கள் இக்பால் (வருஷநாடு), குமரேசன் (கண்டமனூர்) தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். காற்று பலமாக வீசுவதால் காட்டுத் தீ மளமளவென பரவி அரிய வகை மூலிகைகள், மரங்கள் எரிந்து நாசமானது.
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், நாளை ஆடி-18 கொண்டாடப்படுகிறது. இதற்காக தங்கள் குல தெய்வ கோவில் வழிபாட்டுக்கு சிலர் பலி கொடுப்பதுண்டு. இதற்காக வனப்பகுதியில் தீ வைத்து வன விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.
மேலும் அடுப்பு கரிக்காகவும் சிலர் இவ்வாறு தீ வைக்கின்றனர். இப்பகுதியில் வேட்டை கும்பல் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் வனப்பகுதி மற்றும் விலங்குகள் அழியும் சூழல் உள்ளது. எனவே வனத்துறையினர் சமூக விரோத கும்பலை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.